அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – அர்செனலை மீண்டும் வதைத்தது மென்செஸ்டர் சிட்டி !
விளையாட்டு

பிரீமியர் லீக் – அர்செனலை மீண்டும் வதைத்தது மென்செஸ்டர் சிட்டி !

லண்டன், மார்ச்.2-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அதிரடி படைத்து வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 – 0 என்ற கோல்களில் அர்செனலை வீழ்த்தியது.

நான்கு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற காராபாவோ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் மென்செஸ்டர் சிட்டி அர்செனலை இதே கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது. இந்நிலையில் எமிரேட்ஸ் அரங்கில் நடந்த ஆட்டத்தில் அர்செனல் தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும் முதல் பாதியில் போடப்பட்ட மூன்று கோல்களில் அர்செனல் சுருண்டது.

பெர்னார்டோ சில்வா, டாவிட் சில்வா, லெரோய் சானே அந்த மூன்று கோல்களையும் போட்டனர். இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் 16 புள்ளிகளில் முதலிடத்தில் உள்ளது.

இன்னும் 10 ஆட்டங்களே எஞ்சியுள்ள வேளையில் அடுத்து வரும் 5 ஆட்டங்களில் மென்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் லீக் பட்டத்தை உறுதிச் செய்ய முடியும். அர்செனல் 45 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ள டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரைக் காட்டிலும் 10 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன