தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கி அது தீபாவளிக்கு வருவதாக தகவல்.

இந்த  நிலையில் தல 59′ படம் குறித்த செய்தி ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் வெற்றியை அடுத்து அஜித்துக்கு இயக்குனர் H.வினோத் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்திருந்தாலும் இருவருமே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டதாகவும், தற்போது மீண்டும் இருவரும் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ‘தல 59’ படத்தை H.வினோத் இயக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இருப்பினும் இந்த தகவல் H.வினோத் மற்றும் அஜித் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை இயக்க விஷ்ணுவர்தன் மற்றும் புஷ்கர்-காயத்ரி ஆகியோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.