முகப்பு > விளையாட்டு > அர்செனல் நிர்வாகி பொறுப்புக்கு ஹென்ரி பொருத்தமானவர் அல்ல – பெத்திட்!
விளையாட்டு

அர்செனல் நிர்வாகி பொறுப்புக்கு ஹென்ரி பொருத்தமானவர் அல்ல – பெத்திட்!

லண்டன், மார்ச்.3 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஆர்சன் வெங்கர் விலகினால், அந்த இடத்துக்கு தியேரி ஹென்ரி நியமிக்கப்படுவதை தாம் ஆதரிக்கவில்லை என அர்செனல் கிளப்பின் முன்னாள் ஆட்டக்காரர் எமானுவெல் பெத்திட் தெரிவித்துள்ளார். அர்செனல் கிளப்பைப் பொறுத்தவரை ஹென்ரி ஒரு சகாப்தம் நிலையில் இருக்கிறார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட்டின் ராயன் கிக்சுக்கு அடுத்து மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஆட்டக்காரர் தியேரி ஹென்ரி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. முன்னாள் ஆட்டக்காரர் என்ற ஒரு தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஹென்ரி நிர்வாகி பொறுப்பை குறி வைக்க முடியாது என பெத்திட் தெரிவித்துள்ளார்.

அர்செனலில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனுபவமிக்க ஒரு பயிற்றுனர் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.எனவே அர்செனல் தனது முன்னாள் ஆட்டக்காரர்களான தியேரி ஹென்ரி, பாட்ரிக் வியேரா , மிக்கேல் அர்த்தேத்தா போன்ற ஆட்டக்காரர்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என பெத்திட் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன