முகப்பு > மற்றவை > கடலடி சுரங்கப் பாதை குத்தகை வர்த்தகருக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கடலடி சுரங்கப் பாதை குத்தகை வர்த்தகருக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்

புத்ரா ஜெயா, மார்ச் 3-

பினாங்கின் கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளி ஊழலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் வர்த்தகர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி 630 கோடி பெறுமான திட்டத்தை மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் விசாரணை செய்யாமலிருப்பதை சுமுகமாகத் தீர்த்து வைக்க அந்நிறுவனம் உறுதி கூறி மேற்கண்ட தொகையைப் பெற்றதாக நம்பப்படுகிறது. டத்தோ எனக் கூறப்படும் இந்திய முஸ்லிமான 64 வயதுடைய அந்த நபர் விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 6ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 30 லட்சம் வெள்ளிப் பணத்தை கடந்த ஆண்டு கொஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.

இதே போன்று ஊழல் சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் டத்தோஸ்ரீ ஞானராஜா வெ. 1 கோடியே 90 லட்சம் பணத்தை பெற்றதாக கைது செய்யப்பட்டு மார்ச் 5ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு  சினிமாவிலும் அரசியலிலும் அதிகம் தொடர்பு இருப்பதாக கூறி சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஈடுப்பட்டிருந்த முதன்மை குத்தகை நிறுவனத்திடமிருந்து அந்த தொகையைப் கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் பெற்றதாக நம்பப்படுகிறது.

அந்தப் பணத்தில் முதல் தவணை பணம் 20 லட்சம் வெள்ளி கடந்தாண்டு ஜூலை மாதத்தில் அவரின் வீட்டில் பெற்றதாகவும், இரண்டாம் தவணைப் பணம் 1.5 கோடி வெள்ளி நிறுவனம் ஒன்றிற்காக அதே மாதம் பெற்றதாகவும் மீதப் பணத்தை ஆகஸ்டு மாதம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன