அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் அன்வார் இப்ராஹிம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் அன்வார் இப்ராஹிம்!

கோலாலம்பூர், மார்ச் 5-
உடல்நலக் குறைவின் காரணமாக இன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எதிர்கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் ஒருவர் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிம் மாலை மணி 4.00 அளவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாகவும் அவர் செராஸ் புனர்வாழ்வு மையத்தில் தனது சிகிச்சையை தொடர்ந்து பெறுவார் என டத்தோ டாக்டர் எஸ்.ஜேயேந்திரன் தெரிவித்தார்.

முன்னராக உடல்நலக் குறைவின் காரணமாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் (கரோனரி) இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அவரது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவருக்கு ஊசி போடப்பட்டது. ஆயினும், அதனால், ஏற்பட்ட விளைவின் காரணமாக இன்று 1.00 மணி அளவில் அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பி.கே.ஆரின் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அன்வாரின் இதயத் துடிப்பு குறைவாகவும் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும் அவரது உடல் நிலை சீராகவே உள்ளது. அவரது உடல்நிலை பற்றி அவ்வப்போது நிலவரங்கள் வழங்கப்படும் என ஃபாமி ஃபாட்சில் கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன