திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மாத்திச்சின் கோலில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி!
விளையாட்டு

மாத்திச்சின் கோலில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி!

லண்டன், மார்ச்.6 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நெமாஞ்சா மாத்திச் அடித்த கடைசி நிமிட கோலால் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றுள்ளது. திங்கட்கிழமை செல்ஹூர்ஸ்ட் பார்க் அரங்கில் நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 3 – 2 என்ற கோல்களில் கிறிஸ்டல் பேலசை வீழ்த்தியது.

இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்த மென்செஸ்டர் யுனைடெட் இறுதியில் 3 – 2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. 11 ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரி டவுன்சென்ட் போட்ட கோலின் மூலம் கிறிஸ்டல் பேலஸ் 1 – 0 என்ற கோலில் முன்னணிக்குச் சென்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய 3 நிமிடங்களில் பாட்ரிக் வான் ஹோல்ட் , கிறிஸ்டல் பேலசின் இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

55 ஆவது நிமிடத்தில் கிறிஸ் ஸ்மாலிங் போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்திற்குள் நுழைந்தது. 76 ஆவது நிமிடத்தில் ரொமேலு லுக்காகூ போட்ட கோலால், மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது.

ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 90 ஆவது நிமிடத்தில் நெமாஞ்சா மாத்திச் போட்ட கோல், மென்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றியை உறுதிச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் மீண்டும் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

62 புள்ளிகளுடன் மென்செஸ்டர் யுனைடெட் இரண்டாவது இடத்தில் உள்ள வேளையில் 60 புள்ளிகளுடன் லிவர்புல் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதவிருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன