முகப்பு > இந்தியா/ ஈழம் > சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு
இந்தியா/ ஈழம்

சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சேலம், ஜூலை 28-

சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அக்கூட்டத்திற்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் சீமான் அமைதியான இந்தியாவை கிளர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், சட்டத்தை மதிக்கும் இந்திய நாட்டின் இளைஞர்களை ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்றும், மத உணர்வுகளை தூண்டி வேற்றுமை ஒற்றுமையை கலைக்கும் விதத்திலும், இந்திய அரசுக்கு உலக நாடுகளுக்கு இடையே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறியிருந்தனர்.

இதையடுத்து சீமான் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன