செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > சிப்ஸ் பொட்டலத்திற்குள் பாம்பு
உலகம்

சிப்ஸ் பொட்டலத்திற்குள் பாம்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 28-

ஹாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து வந்த பொட்டலத்தை சோதனையிட்டதில் அதிலிருந்து 3 ராஜநாகங்கள் பிடிபட்டன.

ஹாங்காங்கிலிருந்து கடந்த 25-ஆம் தேதி கலிஃபோர்னியாவுக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்தது. அப்போது அந்த பார்சலில் இருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சோதனையிட்டதில் அந்த டின்னில் 3 ராஜநாகங்கள் அடைக்கப்பட்டு கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது.

முதலில் பாம்புகளை எடுத்துவிட்டு அதிகாரிகள் பார்சலை பெற இருந்த ரோட்ரிகோ பிரான்கோ (34) என்பவருக்கு அனுப்பினர். இதைத் தொடர்ந்து வீட்டை சோதனை இடுவதற்கான ஒப்புதலை பெற்று அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களான முதலை, அலிகேட்டர், ஆமை, டெர்ராபின் உள்ளிட்டவை ஒரு தொட்டியில் இருந்தன.

இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுபோன்று பார்சலில் கடத்திய 20 ராஜநாகங்கள் இறந்து கிடந்ததாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன