முகப்பு > கலை உலகம் > வெற்றி மாறனின் வட சென்னை — முதல் பார்வை !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வெற்றி மாறனின் வட சென்னை — முதல் பார்வை !

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கியிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மூன்று பாகங்களாக தயாராகும் ‘வடசென்னை’ படத்தின் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. அதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. ‘வடசென்னை’ படம் 3 பாகமாக எடுக்கப்பட இருக்கிறது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

வடசென்னை’ படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. தற்போது நடந்துவரும் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை முடித்து படத்தை ரம்ஜான் விடுமுறைக்காக ஜூன் 14 அன்று வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் அன்பு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த போஸ்டரில் வாயில் கத்தியை கவ்வியவாறு கயிற்றைப் பிடித்து ஏறுகிறார் தனுஷ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன