புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நகைச்சுவையில் கலக்க வருகிறான் ‘கன் கண்ணாயிரம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நகைச்சுவையில் கலக்க வருகிறான் ‘கன் கண்ணாயிரம்

கோலாலம்பூர், மார்ச்  9-

எதிர்வரும் மார்ச் 10-ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோவின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ‘கன் கண்ணாயிரம் உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன், கணினி, மற்றும் மடிக்கணினி போன்ற சாதனங்களின் மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கே இருந்தாலும் கண்டு களிக்கலாம்.

‘கன் கண்ணாயிரம் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்

முற்றிலும் நகைச்சுவை கலந்த ‘கன் கண்ணாயிரம் நிகழ்ச்சியில் நடிகர், பாடகர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட விகடகவி மகேன், வெட்டி பசங்க புகழ் ஆல்வின் மார்டின், உள்ளூர் நகைச்சுவை நடிகர்களான சசி குமார், சண்முகநாதன் மற்றும் வளர்ந்து வரும் மிமிகிரி கலைஞர் நவீன்ஹோ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஒரு முடிதிருத்தும் கடையில் இடம்பெறும் காட்சிகள் அக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் செய்யும் கேலி கிண்டல்கள், நகைச்சுவை நிறைந்த வசனங்கள் என அனைத்து விஷயங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியக் கலைஞர்களை காணலாம். அவ்வகையில், சிங்கப்பூரில் ஜோ திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் அப்துல் கதிர், நம் உள்ளூர் கலைஞர்களான ஷாம் சுந்தர், டினேஸ், முகேன் ராஷ், பாலகணபதி, சுபாசினி, சிவகுமார், டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர், ராகாவின் அறிவிப்பாளர் புன்னகைப்பூ கீதா, ஜெயா கணேசன், கல்பனா ஸ்ரீ ஆகியோர் கேமியோ தோற்றம் அளித்துள்ளார்கள்.

இவர்களுடன் மலாய் நகைச்சுவைத் துறையில் புகழ்பெற்ற இமுடா மற்றும் ராஜா லவாக் தயுக்கே இந்நிகழ்ச்சியில் வலம் வரவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதி 2 அத்தியாயங்களில் பாகுபலி புகழ் நடிகர் நாசரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

‘கன் கண்ணாயிரம் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆன் டிமாண்ட் சேவையில் மட்டுமின்றி அதன் 13 அத்தியாயங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231 மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம்.

ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், இன்று பிரபலமாக உள்ள உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் தேவை, எப்போது தேவை மற்றும் எங்கே தேவை, ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றோம்.

அவ்வகையில், 20-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்களுடன் நகைச்சுவை நிறைந்த இந்த ‘கன் கண்ணாயிரம் நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியின் அனைத்து அத்தியாயங்களையும் ஆன் டிமாண்ட் (on demand) வாயிலாக கண்டு களித்து மகிழலாம்.

‘கன் கண்ணாயிரம் நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடுங்கள். ஆஸ்ட்ரோ உலகம் www.facebook.com/AstroUlagam/, www.astroulagam.com.my , www.instagram.com/astroulagam

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன