செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஷாபாஸ்: கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோக சீரமைப்பு பணிகள் சீரடைந்து வருகிறது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஷாபாஸ்: கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோக சீரமைப்பு பணிகள் சீரடைந்து வருகிறது!

கோலாலம்பூர், மார்ச் 10-
பெட்டாலிங், கோலாலம்பூர், கோலாலங்காட் ஆகியவற்றில் நீர் விநியோக பிரச்னைக்கான மீட்பு விகிதம் இன்னமும் குறைவாக இருந்தாலும் நேற்று இரவு தொடங்கி மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் சீரமைப்பு பணிகள் சீரடைந்து வருவதாக சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம் (ஷாபாஸ்) தெரிவித்தது.

இன்று காலை மணி 7.00 வரையிலான நிலவரத்தின் படி 73 விழுக்காடு பகுதிகளில் இன்னும் நீர் விநியோகம் சீராகவில்லை. அவ்வகையில், பெட்டாலிங், கோலாலம்பூர், கோலாலங்காட் ஆகியவற்றில் அதன் விகிதங்கள் முறையே 47.5%, 30.4%, 17.8% ஆக உள்ளது.

உலுசிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் ஆகியவற்றில் அதன் சீரமைப்பு விகிதங்கள் முறையே 98.8%, 85.5%, 77.8% ஆக உள்ளது. நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் வரையில் தண்ணீர் லோரிகளில் நீர் விநியோகங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டு வருவதோடு உள்ளூர் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

நீர் விநியோக பிரச்னை தொடர்பான விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் 15300 அல்லது 1800-88-5252 ஆகிய எண்களில் வாடிக்கையாளர்கள் சேவையை தொடர்பு கொள்ளலாம். மேலும், தங்களது விவேக கைத்தொலைபேசியில் ‘மைஷாபாஸ் எனும் செயலியின் வாயிலாகவும் www.syabas.com.my மற்றும் முகநூலில் Air Selangor எனும் பக்கத்தின் வாயிலாகவும் தகவல்களைப் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன