திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்பவர் நோ ஓமார் அல்ல! டத்தோஸ்ரீ அஸ்மின் அலி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்பவர் நோ ஓமார் அல்ல! டத்தோஸ்ரீ அஸ்மின் அலி

அம்பாங், மார்ச் 11-
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சமூக நலம் சார்ந்த திட்டங்களை முடிவு எடுக்க கூடிய அதிகாரம் நாட்டு மக்களுக்கே உள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

திறன்மிக்க நிர்வாகம் கொண்ட மலேசிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க நாட்டு மக்களுக்கு விவேகமும் மற்றும் சரியான தேர்வு செய்யக்கூடிய ஆற்றலும் இருக்கிறது என்றார். மலேசிய மக்களுக்கு நோ ஓமார் போன்ற அம்னோ தலைவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் அவதூறுகளும் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

‘‘நாம் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி. மலேசிய மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். நமது கொள்கைகளை மதிப்பீடு செய்ய பொது மக்களிடம் விட்டு விடுகிறோம். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்வது நோ ஓமார் அல்ல, மாறாக நாட்டு மக்களின் விவேகமான தேர்வை மதிக்க வேண்டும்.

மக்கள் மாநிலம் மற்றும் நாட்டிற்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சியை கொண்டு வரும் கட்சியை தேர்ந்தெடுப்பதில் வல்லமை கொண்டவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கொண்டு வந்த தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இல்லை மற்றும் வெறும் வாக்குகளை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில் டத்தோஸ்ரீ அஸ்லின் அலி இவ்வாறு கூறினார்.
(நன்றி, சிலாங்கூர்கினி)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன