ஈரோடு:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று காலை பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற அவர், “என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத்தினால் – அன்புடன் கமல்ஹாசன்” என வருகையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை கமல்ஹாசன் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவேண்டும் என ஸ்டாலின் கூறியது ஏற்புக்குரியது. ராஜிவ் காந்தி கொலையில் சிறையில் உள்ளவர்களை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம் மிக்கது. அதில் தண்டனை பெற்ற 7 பேரை நாம் விடுவிக்க வேண்டும் என கேட்பது சட்டத்தின் தளர்வு.
அரசியலில் வளர்ச்சி பெற சினிமா புகழ் மட்டும் போதாது. கிறிஸ்துவ மிஷனரிகள் எனக்கு நிதியுதவி செய்வதாக மற்றவர்கள் கூறுவது நகைப்புக்குரியது. தான்தோன்றித்தனமாக கேட்பவர்களுக்கு பதில் கூற முடியாது.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.