திங்கட்கிழமை, ஜனவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > என்றென்றும் நஜீப்பிற்கு விசுவாசமாக இருப்பேன் -டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட்
முதன்மைச் செய்திகள்

என்றென்றும் நஜீப்பிற்கு விசுவாசமாக இருப்பேன் -டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட்

கோலாலம்பூர், ஜூலை 28-

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு விசுவாசமாக இருக்குப்பேன் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் முன்னிலையில் அவர் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.  சமயத் தலைவர்களின் கூட்டம் ஒன்றில் பேராளர் ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அகமட் ஸாஹிட் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

நான் இன்னும் பிரதமராகவில்லை. நஜீப்பிற்கு உதவியாக துணைப்பிரதமராகத்தான் இருந்து வருகிறேன்.எனினும் அவருக்கு முழு விசுவாசமாக இருக்கின்றேன். தொடர்ந்து நான் அவருக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

மலேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் அனைத்துலக சமயத் தலைவர்கள் மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய போது உள்துறை அமைச்சருமான அகமட் ஸாஹிட் ஹமிடி இதனைத் தெரிவித்தார். அவரது உறுதிமொழியை கேட்ட பின்னர் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சமயத் தலைவர்கள் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன