பாலிங், மார்ச் 11-
எதிர்கட்சிகளை ஆதரிக்கும் சில ஆசிரியர்கள் தலைமையாசிரியராக ஆக வேண்டுமென ஆசைப்படுவது தொடர்பில் கல்விமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலீட் சாடினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு சிலர் ஆசிரியர்கள் மட்டுமே இத்தகைய பிரச்னைக்குரியவர்களாக இருப்பதாக அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி, பெர்சாத்து முதலானவற்றை அவர்கள் ஆதரிக்கின்றனர். சிலர் அக்கூட்டணியின் சட்டைகளை அணிவதோடு சமூகவலைத்தளங்களிலும் பதிவிடுகின்றனர். அதன் பிறகு, தேசிய நிபுணத்துவ கல்வி தலைமைத்துவ தகுதி திட்டத்திற்கு (NPQEL) செல்கின்றனர்.

தலைமையாசிரியராக ஆசை. ஆனால், அரசாங்கத்துடன் எப்படி இருக்கிறீர்கள்? என இன்று பாலிங்கில் நடைபெற்ற மலேசிய கல்வி அமைச்சின் பாலிங் மாவட்ட ஆசிரியர்களுடனான நிகழ்ச்சியில் மாட்சீர் காலீட் சொன்னார். ஆசிரியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் அதிகபட்சமாக நடந்துக்கொள்ளக்கூடாது என தாம் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.