புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தேர்தல் வாக்குறுதிகள்: எங்களுடன் விவாதம் செய்ய தே.மு. தயாரா? நம்பிக்கைக் கூட்டணி சவால்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகள்: எங்களுடன் விவாதம் செய்ய தே.மு. தயாரா? நம்பிக்கைக் கூட்டணி சவால்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12-
இரண்டு கூட்டணிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பில் எங்களுடன் விவாதம் செய்வதற்கு தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகளை வரையும் தரப்பினர் தயாரா? என பெர்சாத்து கட்சியின் வியூக நிபுணர் டத்தோ ராயிஸ் ஹுசேன் சவால் விடுத்தார்.

கடந்த வியாழக்கிழமை நம்பிக்கைக் கூட்டணி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தேசிய முன்னணியின் தலைவர்கள் முன்வைத்து வருவதைத் தொடர்ந்து அவர் இந்த சவாலை முன் வைத்தார்.

போதுமானவற்றைவிட எங்களிடம் அதிகம் உள்ளது. எங்களுக்கு தேவையானவை அதிகம் உள்ளது. தேசிய முன்னணி பல்வேறு கதைகளைக் கொண்டு பயமுறுத்தும் போது நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம். எங்களது தேர்தல் வாக்குறுதிகளை வரையும் போது நாட்டின் முக்கியமான தரப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துகளையும் பெற்றோம்.

அனைத்து தரப்புகளிடமிருந்து முக்கியமான தரப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தி ஆய்வுகளையும் செய்துள்ளோம். எங்களது தேர்தல் வாக்குறுதிகள் முழுமைப்பெற்றுள்ளது. அதனால், தேசிய முன்னணி அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு அதனை வரைந்த அவர்களது தரப்புடன் விவாதம் நடத்த நாங்கள் விரும்புகின்றோம்.

தைரியமிருந்தால் அவர்கள் இந்த சவாலை ஏற்கட்டும் என இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ராயிஸ் ஹுசேன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன