திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய இந்திய விளையாட்டு பேரவையில் டத்தோஸ்ரீ வேள்பாரிக்கு புதிய பதவி!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசிய இந்திய விளையாட்டு பேரவையில் டத்தோஸ்ரீ வேள்பாரிக்கு புதிய பதவி!

கோலாலம்பூர், மார்ச். 12 –

எம்.ஐ.எஸ்.சி எனப்படும் மலேசிய இந்திய விளையாட்டுப் பேரவையில், ம.இ.கா. பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவை சார்பில் இளையோர் மேம்பாட்டுக் குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கு டத்தோஸ்ரீ வேள்பாரி தலைவராக நியமிக்கப்படுவார் என ஞாயிற்றுக்கிழமை டாமன்சாரா காமன்வெல்த் கிளப்பில் மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவையின் ஆண்டு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் அதன் தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டுகளிலும் முத்திரை பதிக்கும் இளம் விளையாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு, மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவார் என்று என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு முன்னர், 2007 ஆம் ஆண்டில் மலேசிய இந்திய கால்பந்து அணி ( மீபா ) இத்தாலியில் அனைத்துலக கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேள்பாரி முக்கிய பங்கை ஆற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே பரதன் கிண்ண கால்பந்துப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த மலேசிய இந்திய விளையாட்டுப் பேரவை ஏற்பாட்டில் வரும் ஜூலை மாதத்தில் 23 வயதிற்குட்பட்டவர்களுக்கான இளையோர் புட்சால் கிண்ணம் ஏற்பாடு செய்யப்படுவதாக சுப்ரா ரத்னவேலு தெரிவித்தார்.

பரதன் கிண்ண பாணியில் இளையோர் கால்பந்து கிண்ணமும் நடைபெறும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதனை தவிர்த்து பேட்மிண்டன், சிலம்பம், ஹாக்கி போட்டிகளும் கட்டம் கட்டமாக நடத்தப்படுமென அவர் மேலும் கூறினார்.அனுமதியை மிஃபா பெற்றுள்ளது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன