புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ராஜா பெட்ராவை வெளுத்து வாங்கினார் ரபிடா அசிஸ் !
முதன்மைச் செய்திகள்

ராஜா பெட்ராவை வெளுத்து வாங்கினார் ரபிடா அசிஸ் !

கோலாலம்பூர், மார்ச்.14- 

இணைய பதிவேட்டாளர் ராஜா பெட்ரா கமரூடின் ,  தனது மலேசிய டூடே அகப்பக்கத்தில் தம்மை பற்றி வெளியிட்டுள்ள கட்டுரைகள் அனைத்தும் அபத்தமானவை என  அனைத்துலக வாணிக மற்றும் தொழில்துறை முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ ரபிடா அசிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று தனது பேஸ்புக்கில் ராஜா பெட்ரா குறித்து பதிவிட்ட ரபிடா அசிஸ்,  நாட்டை சூழ்ந்துள்ள் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத் திருப்ப இதுபோன்ற கட்டு கதைகளை அவிழ்த்து விட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

மலேசியாவின் அமலாக்க தரப்புகளால் தேடப்பட்டு, பின்னர் பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ள  ராஜா பெட்ரா ஒரு வேடிக்கையான மனிதர் என ரபிடா தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி புதிதாக எழுதியுள்ள கட்டுரையைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இதனை எழுதுவதற்கு அவருக்கு எவ்வளவு பணம் ( பவுண்ட் ஸ்டேர்லிங் மதிப்பில் ) கொடுக்கப்பட்டிருக்கும் என ரபிடா கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜா பெட்ராவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என சொன்ன ரபிடா, கடந்த பல ஆண்டுகளாக ராஜா பெட்ரா தனது கதைகளை மாறி மாறி கூறி வருவதாக தெரிவித்தார். மங்கோலியா மாடல் அழகி அல்தான்துயா ஷரிபு மரணம் தொடர்பில் சத்திய பிரமாணத்தை வெளியிட்ட ராஜா பெட்ரா சில ஆண்டுகளுக்கு பின்னர் டிவி3 தொலைக்காட்சி செய்தியில் தனது கதையை மாற்றி கூறினார்.

21 ஆண்டுகளாக அமைச்சராக இருந்ததன் மூலம் தாம் 800 கோடி ரிங்கிட் சம்பாதித்திருப்பதாக ராஜா பெட்ரா கூறியிருப்பதையும் அவர் மறுத்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட ரபிடா, ஒரு வேளை எனக்கு யாராவது நன்கொடை வழங்கியிருக்கலாம். மன்னிக்கவும் நன்கொடை விசயத்தை மற்றொருவர் பயன்படுத்தி விட்டார் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

ஏர் ஆசியாவின் உண்மையான உரிமையாளர் நான் தான் ( டோனி, டின் மன்னித்து விடுங்கள், தள்ளி நில்லுங்கள்,…நான் தான் உண்மையான உரிமையாளர் ) என ரபிடா பதிவிட்டுள்ளார்.  ரபிடா அசிஸ் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை ஏர் ஆசியா நிறுவனத்தில் போட்டு வைத்துள்ளார் என ராஜா பெட்ரா கூறிய கருத்துக்கு ரபிடா மேற்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த முறை இந்த யூ டர்ன் மன்னன் கதையை மாற்றி கூறினால் அதிர்ச்சி அடையாதீர்கள் என ரபிடா தெரிவித்தார். ராஜா பெட்ரா தமது தவறை உணர வேண்டும் எனவும் ரபிடா அறிவுறுத்தியுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன