அஸ்ட்ரோவின் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” குறும்படப் போட்டி

குறும்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ள இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் அஸ்ட்ரோ வானவில் ஏற்பாட்டில் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” குறும்படப் போட்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 2-ஆம் தேதிக்குள் அதிகமானோர் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி இந்தக் குறும்படப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூன்று பிரிவுகளாக நடந்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 14 குறும்படங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சிறந்த குறும்படத்தைத் தேர்ந்தெடுக்க அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் அக்குறும்படங்கள் மக்கள் வாக்களிக்க பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 19-ஆம் தேதிக்குள் தங்களுடைய விருப்பமான குறும்படங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரிவு 1 : 10 முதல் 12 வயது வரை
1)கைப்பேசி
2)திருப்பங்கள்
3)துயில்
4)விடிவெள்ளி

பிரிவு 2 : 13 முதல் 17 வயது வரை
1)இது நம் குடும்பம்
2)குறைவில்ல அன்பு
3)நிழல்
4)தந்தை
5)வளர்ப்பு

பிரிவு 3 : 18 முதல் 25 வயது வரை
1)அழல் காற்று
2)துர் விநியோகி
3)மகனாகிய நான்
4)பிதா
5)தியாகங்கள்

அஸ்ட்ரோ வானவில் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” குறும்படப் போட்டியை குறித்து மேல் விவரங்களை அறிய www.astroulagam.com.my/shortfilm என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.