இன்று உங்களது ராசி பலன்

0
9

மேஷம்

இன்று சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ரிஷபம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் செய்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களது பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும். அதனை பொறுமையுடன் சமாளிக்கவேண்டும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

 

கடகம்

இன்று புதிய முயற்சிகளை எடுக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். அதிகப்படியான செலவுகளின் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.

 

சிம்மம்

இன்று உங்களது புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

 

கன்னி

இன்று உங்களது மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

 

துலாம்

இன்று உங்களது மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான ஆரோக்கியக் குறைபாடு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகம் தரும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது.

 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமை அவசியம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.

 

தனுசு

இன்று நீங்கள் மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் முடிந்துவிடும். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

 

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். தேவையான பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.

 

கும்பம்

உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

மீனம்

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள்.