முகப்பு > முதன்மைச் செய்திகள் > பிபிஆர், பொது வீடமைப்புத் திட்ட வாடகை உயர்த்தப்படாது -டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்
முதன்மைச் செய்திகள்

பிபிஆர், பொது வீடமைப்புத் திட்ட வாடகை உயர்த்தப்படாது -டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்

கோலாலம்பூர், மார்ச் 18-
தலைநகரிலுள்ள பிபிஆர் வீடுகள் மற்றும் பொது வீடமைப்புகளின் வாடகைகள் உயர்த்தப்படும் சில தரப்பினர்கள் கூறுவதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மறுத்தார்.

தற்போது உள்ள வாடகை மற்றும் வரி விகிதம் தொடர்ந்து அதே நிலையில்தான் இருக்கும். அதனை அதிகரிப்பதற்கு மாநகர் மன்றத்திற்கு எண்ணமில்லை என அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு கருதி தேசிய முன்னணி தற்போது தேசிய முன்னணி பல நடவரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பெரிங்கின் பிபிஆர் குடியிருப்புப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண வெ.1.5 கோடி மதிப்புள்ள 6 மாடி வாகன நிறுத்துமிடத்தை மாநகர் மன்றம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதன் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டார்.

எனவே, வாடகைகள் உயர்த்தப்படுவதாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் பொது வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர்களை கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன