முகப்பு > விளையாட்டு > இளம் ஆட்டக்காரர்களை முன்நிறுத்துகிறார் ரோனால்ட் கூமன்!
விளையாட்டு

இளம் ஆட்டக்காரர்களை முன்நிறுத்துகிறார் ரோனால்ட் கூமன்!

ஆம்ஸ்டர்டாம், மார்ச்.20 –

இந்த வார இறுதியில் அனைத்துலக நட்புமுறை கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நெதர்லாந்து அணி இளம் ஆட்டக்காரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தேர்வு பெறும் வாய்ப்பை நெதர்லாந்து இழந்ததை அடுத்து ரோனால்ட் கூமன், அந்த அணியின் புதிய பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நெதர்லாந்தின் அனுபவமிக்க ஆட்டக்காரர்களான ஆர்யன் ரோபேன், வெஸ்லி சினைடர் போன்ற ஆட்டக்காரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால் இளம் ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய ஓர் அணியை ரோனால்ட் கூமன் களமிறக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். ஆம்ஸ்டர்ம்மில் வெள்ளிக்கிழமை இங்கிலாந்தை சந்திக்கும் நெதர்லாந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் ஜெனிவாவில் போர்ச்சுகலை எதிர்கொள்ளவிருக்கிறது.

நெதர்லாந்து அணியில் திறமையான சில ஆட்டக்காரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால், அடுத்த தலைமுறையினரை அடையாளம் காண வேண்டிய தருணமிது என ரோனால்ட் கூமன் தெரிவித்தார். 34 வயதுடைய ரோபேன், இன்னமும் அனைத்துலக ஆட்டங்களில் விளையாடும் ஆற்றலைக் கொண்டுள்ளார்.

எனினும் ஓய்வு பெற வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை தாம் மதிப்பதாக கூமன் மேலும் சொன்னார். நெதர்லாந்து அணியில் தற்போது இருக்கும் இளம் ஆட்டக்காரர்களைக் கொண்டு ஒரு பலம் வாய்ந்த அணியை உருவாக்கும் பணியை தாம் ஏற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன