கோலாலம்பூர், மார்ச் 20-

தற்போது அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதன் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக சில தரப்பினர் கூறப்படுவதை பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஜோசப் எந்தலு பெலாவுன் மறுத்துள்ளார்.

இவ்வாறு சில தரப்பினர் கூறி வருவதால் நமது நாட்டுடன் மற்ற நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். நமது நாட்டில் போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் அரசு சேவையில் சேர்க்கப்படுகின்றனர். மற்ற நாடுகளில் இவை இரண்டும் அரசு சேவையில் சேர்க்கப்படவில்லை. இது தவறான ஒப்பீடு என இன்று செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும். அதற்காக சிலர் வார இறுதியிலும் வேலை செய்து வருகின்றனர். செயலாளர் பதவியிலிருக்கும் தமது அதிகாரிகள் பெரும்பாலோர் ஓய்வெடுக்காமல் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வேலை செய்து வருகின்றனர் என அவர் சொன்னார்.

தங்களது பணிகளில் அனுபவம் வாய்ந்த பணி ஓய்வு பெறப்போகும் அதிகாரிகளிடம் சேவை காலத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டாலும் தங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று அவர்கள் கூறுவதாக அவர் கூறினார்.