பொதுத்தேர்தலில் பணியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு இலாவுன்ஸ் ஸாஹிட் ஹாமீடி உத்தரவு!

0
15

செராஸ், மார்ச் 20-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் பணியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு 50 விழுக்காடு இலாவுன்ஸை வழங்கும்படு அரசு மலேசிய போலீஸ் படைக்கு (பி.டி.ஆர்.எம்) உத்தரவிடப்பட்டது.

இது குறித்து உள்துறை அமைச்சரும் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி கூறுகையில், குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரியவிருக்கும் போலீஸ்காரர்களின் சமூகநல பரிவின் காரணமாக இந்த நடவடிக்கை கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.

அவர்கள் பொதுத்தேர்தலுக்காக புறப்படும் முன்பே அவர்களுக்கு இந்த தொகையை வழங்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன் என இன்று பி.டி.ஆர்.எம்மின் கல்லூரியில் நடைபெற்ற அதன் உயர்மட்ட செயற்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறினார்.

14ஆவது பொதுத்தேர்தல் முடிந்த பிறகு 30 நாட்களுக்குள் இந்த இலாவன்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் ஊதியம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வியர்வை காய்வதற்குள் இலாவன்ஸ் வழங்கப்பட வேண்டும். அந்த பணத்தை அப்படியே வைத்திருக்காதீர்கள். பி.டி.ஆர்.எம். மீது கொண்ட பரிவுணர்வால் தாம் இதை வழங்குவதாக டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி குறிப்பிட்டார்.

வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய சுமார் 64,000 போலீஸ்காரர்களையும் அதிகாரிகளையும் பி.டி.ஆர்.எம். நாடு தழுவிய நிலையில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளது.