வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சிகாமாட்டிலேயே போட்டியிடுவேன்! டாக்டர் சுப்ரா
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிகாமாட்டிலேயே போட்டியிடுவேன்! டாக்டர் சுப்ரா

புத்ராஜெயா, மார்ச் 21-
வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியை தற்காத்துக் கொள்ள தாம் போட்டியிடுவதாக ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் தாம் முன்னெடுத்த நடவடிக்கை உட்பட அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வேறு தொகுதிக்கு மாற்றலாக வேண்டிய அவசியமில்லை என்பதையும் சுகாதார அமைச்சருமான அவர் உறுதிப்படுத்தினார்.

47 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டுள்ள சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் இம்முறை பலத்த போட்டி நிலவுமென பரவலாகப் பேசப்படுகின்றது. அதோடு அத்தொகுதியை தற்காத்துக் கொள்வது கடினமென பலர் கூறிவருகிறார்கள். இந்நிலையில் 2004ஆம் ஆண்டிலிருந்து சிகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இருந்து வருகிறார். இத்தொகுதியில் 46 விழுக்காடு சீன வாக்காளர்கள், 44 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் இதர 10 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

ஜோகூரை கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் நம்பிக்கைக் கூட்டணி செயல்படுகின்றது. இந்நிலையில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் பாதுகாப்பான தொகுதிக்கு மாற்றலாகிச் சென்றுவிடுவார் என கூறப்பட்ட நிலையில், ‘‘அதை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன