அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சரவாக்கில் நுழைய பி.எஸ்.எம் பவானிக்கு தடை!
முதன்மைச் செய்திகள்

சரவாக்கில் நுழைய பி.எஸ்.எம் பவானிக்கு தடை!

கோலாலம்பூர், ஜூலை 29-
பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த பவானி சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், சரவாக்கிற்குள் நான் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கேலி கூத்தாக உள்ளது. அதோடு, அவர்கள் என்னை போலீசில் புகார் அளிக்கவும் அனுமதிக்கவில்லை என கூறினார்.

நான் மீண்டும் திரும்புவதற்கான டிக்கெட்டிற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த மறுப்பு தெரிவித்தேன். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் எனக்கு திரும்பி செல்வதற்கான டிக்கெட்டை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

சரவாக் மாநிலத்திற்குள் நான் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கான குடிநுழைவுத்துறையின் கடிதத்தை கோரினேன். அந்த கடிதம் கிடைக்காவிட்டால் அங்கிருந்து நகர போவதில்லை என்றும் தாம் கூறியதாக தெ மலேசியன் டைம்ஸ் இணையத்தள செய்தி பதிவேட்டிடம் பவானி கூறினார்.

அதன் பிறகு, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கடிதத்தை வழங்கியதாகவும் தாம் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும் வாட்சாப் சமூகவலைத்தளம் வாயிலாக பவானி தெரிவித்தார். முன்னராக, சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு பி.எஸ்.எம். கட்சியின் பொதுச்செயலாளர் சிவராஜன், பவானி ஆகிய இருவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

பவானி தனது நண்பரின் திருமணத்திற்காக சரவாக்கிலுள்ள கூச்சிங்கிற்கு வர திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சரவாக் அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மட்டுமே குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பவானியிடம் தெரிவித்தனர்.

அவர் பேராக்கிலுள்ள கம்பாரிலிருந்து புறப்படுவதற்கு முன்பு அங்குள்ள குடிநுழைவுத்துறையில் விசாரித்துள்ளார். சரவாக்கிற்குள் நுழைவதற்கு பயண தடை ஏதும் இல்லை என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அவர் சரவாக்கின் விமான நிலையத்திள் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டு மீண்டும் கே.எல்.ஐ.ஏவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிவ்கராஜன் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன