புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இன்று உங்களது ராசி பலன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

இன்று உங்களது ராசி பலன்

மேஷம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

 

ரிஷபம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவில் தடை ஏற்படுவதால், மனதில் நிம்மதி இருக்காது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

 

மிதுனம்

இன்று உங்களது உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு அருமையான நாளாக அமையும். உங்களுடைய ஆளுமை திறனுக்கும் நிர்வாகத் திறனுக்கும் பாராட்டுகள் குவியும். அனைவரும் மரியாதையுடன் நடந்துக் கொள்வார்கள். இன்று எதிர்பார்த்த வரவு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் வரவை எதிர்ப்பார்க்கலாம்.

 

சிம்மம்

இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சுமாரான வரவு பெறலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். அவர்களிடம் பாராட்டும் பெறுவீர்கள்.

 

கன்னி

இன்று உங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.

 

துலாம்

இன்று உங்களது வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவியின் அன்பும், அரவணைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் அனுகூலம் உண்டு.

 

விருச்சிகம்

இன்று நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். எதிரிகளால் மறைமுக பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அவசியம் தேவை. பயணங்களில் தடை ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. வியாபாரம் மந்தமாக இருக்கும்.

 

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இல்லாவிட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சுமாரான வரவுதான்.

 

மகரம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் இருமடங்காக இருக்கும்.

 

கும்பம்

இன்று உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும். சிலருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

 

மீனம்

இன்று உங்களது சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் அனுசரித்து நடந்துக் கொள்வது அவசியம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் சுமாரான வரவுதான் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன