புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சிவகார்த்திகேயனின் கனவு நனவானது!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயனின் கனவு நனவானது!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் சிவகார்த்திகேயனின் பெயரும் இன்னும் சில ஆண்டுகளில் இடம்பிடித்துவிடும். அந்த அளவிற்கு அவரை சுற்றியும் சினிமா வியாபாரம் தொடங்கிவிட்டது.

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் புதிய நடிகர்கள் உச்சத்தில் இருக்கும் போது பல படங்களை ஒப்புக் கொண்டு, தோல்வியை சந்தித்து விடுவதோடு, சினிமா துறையை விட்டு காணாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் பாணி தனிதான்.

2012ஆம் ஆண்டு சினிமா துறையில் கால் வைத்த சிவா இதுவரையில் 11 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அண்மையில் அவர் நடித்து வெளிவந்த வேலைக்காரன் திரைப்படமும் வெற்றி படமாக மாறியது. அடுத்து அவர் வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணியுடன் சீமராஜா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை அடுத்த இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமாருடன் சிவகார்த்திகேயன் இணையவிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன், ரவிக்குமார் இணைந்து எடுத்துக் கொண்ட நிழல்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது புதிய படத்திற்கான இசை கலந்துரையாடல் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் திவீர ரசிகர் சிவகார்த்திகேயன். இப்போது தம்முடைய படத்திற்கு அவர் இசையமைப்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் சிவா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன