புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மிஃபாவிற்கு வழங்கிய மானியம் எவ்வளவு? செடிக்கின் பதில் தேவை! சிவகுமார் கேள்வி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மிஃபாவிற்கு வழங்கிய மானியம் எவ்வளவு? செடிக்கின் பதில் தேவை! சிவகுமார் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 22-
கால்பந்து துறையில் சாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட மீஃபா கால்பந்து அணிக்கு இதுவரையில் செடிக் எவ்வளவு மானியம் வழங்கியுள்ளது என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

இதுவரையில் செடிக் மூலம் 230 மில்லியன் தொகை மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 5 லட்சம் இந்தியர்கள் பலனடைந்துள்ளார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அதற்கான மாற்றத்தை சமுதாயத்தின் மத்தியில் காண முடியவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

மிஃபாவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையை குறிப்பிட முடியாது என்றும் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ தேவமணி கூறியுள்ளார். அதோடு 22 ஆயிரம் இந்தியர்கள் மீஃபாவிற்கு வழங்கப்பட்ட நிதியின் மூலம் பலனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த 22ஆயிரம் இந்தியர்களை அடையாளம் காட்ட முடியுமா என்றும் சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் மக்கள் சக்தி கட்சிக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கும் செடீக் எவ்வளவு மானியம் வழங்கியது என்றும் அவர் வினவினார். இதனிடையே இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக செடிக் தொடங்கப்பட்ட வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், அதன் மூலம் இந்திய சமுதாயத்திற்கு எந்த வகையில் நன்மையில்லை என்பதை பிரதமரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல தாம் கடிதம் எழுதவிருப்பதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன