முகப்பு > சமூகம் > மெட்ரிகுலேஷன், அரசு உயர்கல்வி மையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை – டத்தோஸ்ரீ நஜீப் 
சமூகம்முதன்மைச் செய்திகள்

மெட்ரிகுலேஷன், அரசு உயர்கல்வி மையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை – டத்தோஸ்ரீ நஜீப் 

புத்ராஜெயா, மார்ச் 24-
மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு உயர்க்கல்வி மையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு ஆய்வு செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

நாட்டின் அரசு உயர்க்கல்வி மையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடு இலக்கு முழுமையாக அடையப்படவில்லை என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று மைநாடி அறவாரிய மன்றத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வின் வழி 7 விழுக்காடு இலக்கை அடைய முடியும் என்று அரசு எதிர்பார்ப்பதாக நஜீப் தெரிவித்தார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் 100,000 இந்தியக் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் ஒரே மலேசியா அமானா சாஹாம் சிறப்பு முதலீட்டுத் திட்டத்தில் பங்குக் கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என நஜீப் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட வெ.150 கோடி வாயிலாக 41,11,40,000 பங்குகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர். இந்த அடைவுநிலை ஊக்கமளிக்ககூடிய வகையில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இந்நாட்டில் வாய்ப்புண்டு.

நாட்டு மக்களின் நல்வாழ்வை கருத்தில் வைத்தும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளும் உதவிகளுக்கு இந்தியர்களுக்கு செய்துத் தரப்படும் என நஜீப் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மைநாடியின் தலைவர் டத்தோ டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரையும் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன