வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மே மாதத்திற்கு முன்னதாகவே பொதுத்தேர்தலா? -டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி விளக்கம்
முதன்மைச் செய்திகள்

மே மாதத்திற்கு முன்னதாகவே பொதுத்தேர்தலா? -டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி விளக்கம்

பாகான் டத்தோ, மார்ச் 24-
எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தல் மே மாதத்தில் அல்லது மே மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படலாம் என ஆருடங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேர்தல் எப்போது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி விளக்கமளித்துள்ளார்.

தேர்தலுக்கான திட்டங்கள் திடீரென மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே, முன் கூட்டியே நடத்தப்படலாம் என உள்துறை அமைச்சருமான ஸாஹிட் கூறினார்.

இன்று பாகான் டத்தோ அறிவியல் இடைநிலைப்பள்ளியில் பூமிபுத்ராக்களுக்கான கல்விப் பயணத்தைத் தொடக்கி வைத்துப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஸாஹிட் இதனை தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் இவ்வாண்டு சீனப் பெருநாளுக்கு பின்னர் நடத்தப்படலாம் என்று டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கடந்தாண்டு நவம்பம் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன