ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தல அஜித் நல்லெண்ண புட்சால் போட்டி! ஹை கிளப் வென்றது
சமூகம்முதன்மைச் செய்திகள்

தல அஜித் நல்லெண்ண புட்சால் போட்டி! ஹை கிளப் வென்றது

செராஸ், மார்ச் 24-
மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 2ஆவது ஆண்டாக நடைபெற்ற புட்சால் போட்டியில் ஹை கிளப் அணி வொண்டர் டிரிம்ஸ் அணியை வீழ்த்தி முதல் பரிசான 700 வெள்ளியைத் தட்டி சென்றது. வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இரண்டாம் நிலையைக் கைப்பற்றிய வொண்டர் சிரிம்ஸ் அணிக்கு 500 வெள்ளியும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு மூன்றாம் நிலையில் வெற்றிப்பெற்ற இன்பினிட்டி அணிக்கு 250 வெள்ளியும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நான்காம் நிலையில் வெற்றிப்பெற்ற எம்.ஆர்.எஸ்.எஃப் அணிக்கு பரிசு கூடையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்ட வேளையில் இதர 20 அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பிரபல நடிகரும் ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சுரேஷ் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், மலேசியாவில் தல அஜித்திற்கு இவ்வளவு ரசிகர் கூட்டம் இருப்பது அவருடைய தீவிர ரசிகர் என்ற முறையில் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். மலேசிய தல அஜித் நற்பணி மன்றம் பல்வேறு சமூகநல சேவைகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியதோடு அம்மன்றத்திற்கு வற்றாத ஆதரவை தாம் வழங்குவதாகவும் ஆர்.கே.சுரேஷ் சொன்னார்.

விரைவில் மலேசியாவில் தாம் நடிக்கவிருக்கும் டைசன் படப்பிடிப்பிற்காக இங்குள்ள இடங்களைத் தாம் பார்க்க வந்ததாகவும் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்ற முறையில் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இங்கு வந்ததில் மனநிறைவைக் கொள்வதாகவும் ஆர்.கே.சுரேஷ் கூறினார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் கூறுகையில், இந்த புட்சால் போட்டி நல்லெண்ணத்திற்காக இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சுமார் 24 அணிகள் பங்கேற்றது தங்களுக்கு மனநிறைவை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது மலேசிய புற்றுநோய் சங்கத்திற்கு வழங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன், கிம்மா கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மலேசிய இயக்குநர்கள் சங்க தலைவர் பென்ஜி, தொழிலதிபர் டத்தோ சுரேன், அநேகன்.கோம் இணையத்தள பதிவேடு, மலேசிய ஏ.ஆர்.ரகுமான் ரசிகர் மன்றம், மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றம் முதலானோருக்கு நன்றியைக் கூறிக்கொள்வதாகவும் தேவேந்திரன் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன