துன் டாக்டர் மகாதீர் அம்னோவில் இணைய தேவையில்லை -டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட்

0
6
Minister of International Trade and Industry Datuk Sri Mustapa Mohamed.

பாலிங், ஜூலை 29-

இனி அம்னோவில் தாம் ஒருபோதும் இணையபோவதில்லை என துன் டாக்டர் மகாதீர் அறிவித்தது எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருக்கும் வரை தாம் அம்னோவில் இணையபோவதில்லை என டாக்டர் மகாதீர் கூறியிருப்பது கட்சியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது எனவும் முஸ்தாபா குறிப்பிட்டுள்ளார்.

அது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றும் கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையைக் கடைப்பிடித்து கட்சி நீண்ட நாள் இயங்குவதை உறுதி செய்வதே முக்கியம் என அவர் தெரிவித்தார். பாலிங் அம்னோ இளைஞர் பிரிவின் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய முஸ்தாபா, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், வரும் பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றியை ஈட்டும் என உறுதியாக நம்பலாம் என்றும் குறிப்பிட்டார்.

கட்சி தற்போது பல்வேறு சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வந்தாலும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.