இன்று உங்களது ராசி பலன்

0
4

மேஷம்

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

ரிஷபம்

இன்று உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளவும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.

 

மிதுனம்

இன்று பணவரவு அதிகமாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளவும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.

 

சிம்மம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக காணப்படுகிறது. தேவையான பணம் கையில் இருக்கும். சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கன்னி

இன்று தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

 

துலாம்

இன்று உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

 

விருச்சிகம்

இன்று நீங்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்குக் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

 

தனுசு

இன்று புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

 

மகரம்

இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

 

கும்பம்

இன்று பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

 

மீனம்

இன்று பணவரவு அதிகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.