சனிக்கிழமை, டிசம்பர் 7, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மக்களை அச்சுறுத்தி ஆட்சியை நடத்த வேண்டியதில்லை – டத்தோஸ்ரீ நஜீப் 
முதன்மைச் செய்திகள்

மக்களை அச்சுறுத்தி ஆட்சியை நடத்த வேண்டியதில்லை – டத்தோஸ்ரீ நஜீப் 

பாரிட், ஜூலை 29-

மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதற்கு பதில், நம்பிக்கையை உண்டாக்கி மக்களுக்கு பக்கபலமாக இருந்து ஆதரவு வழங்குவே தேசிய முன்னணி விரும்புவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

அம்னோ கடந்த 60 ஆண்டுகளாக நேர்மையாகவும்  மக்களின்  நலனுக்காகவும்  பாடுபட்டு சிறந்ததொரு ஆட்சியை வழங்கி வருகிறது. அது மக்களை பயமுறுத்தி நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார். தனது அனுபவத்தைக் கொண்டு நாட்டின் மேம்பாட்டில் பல திட்டங்களைச் செயல்படுத்தி அம்னோ பல வெற்றிகளை கண்டுள்ளதுஅதனால் மட்டுமே ஒரு நல்லாட்சியை அளிக்க முடியும் என்றும் பாரிட் அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது நஜீப் அவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சியைத் தரும் தேசிய முன்னணி வேண்டுமா அல்லது பொய்யான வாக்குறுதிகளை அள்ளித்தரும் எதிர்க்கட்சி ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். 51 கி.மீட்டர் தூரம் கொண்ட சுங்கை பூலோ-காஜாங் எம்.ஆர்.டி ரயில் சேவை வாகன நெரிசலைக் கட்டுப் படுத்தி, மக்களின் போக்குவரத்துச் சுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கி வருவதாகவும், அதன் மூலம் நாட்டின் வருமானம் உயரும் என்றும், நாட்டின் வருமானம் உயர்ந்தால் மக்கள் பயனடையும் வகையில் மேலும் பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரிட் தொகுதியில் வருமானம் குறைந்தோரின் பழுதான வீடுகளைச் சரி செய்வதற்கு வெ. 30 லட்சத்தையும் பாரிட் சாலையை விரிவு படுத்துவதற்கு கூடுதலான அரசு மானியத்தை அளிப்பதாகவும்,  பாரிட் தொகுதியில் நெல் சாகுபடிக்கு மேலும் 3,100 ஹெக்டர் நிலத்தை அளிப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன