தடையை மீறி தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு தகவல்களை வெளியிட்டார் அரசியல் ஆய்வாளர்!

0
5

கோலாலம்பூர், மார்ச்.27-

நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு மீதான அறிக்கையில் உள்ள தகவல்களை அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹூவாட் இன்று பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்படும் முன்னர் அதில் உள்ள தகவல்கள் எந்த வகையிலும் வெளியிடப்படக்கூடாது என இதற்கு முன்னர் மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ பண்டிக்கார் அமின் மூலியா எச்சரித்திருந்தார். இந்நிலையில் கோலாலம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் வோங் சின் ஹூவாட் இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தடையையும் மீறி நாட்டின் நன்மைக்காக தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வோங் சின் ஹூவாட் கூறுகிறார். தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு மீதான அறிக்கை பேரழிவைக் கொண்டு வரும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த அறிக்கையில் உள்ள பல தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என தேர்தல் ஆணையமும் அதிகார தரப்பும் நினைத்திருக்கலாம். ஆனால் மிகப் பெரிய விளைவைக் கொண்டு வரக் கூடிய இந்த அறிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

Engage எனப்படும் அரசாங்க சார்பற்ற இயக்கத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் தேர்தல் ஆணையத்தின் முழு அறிக்கையையும் தாம் பதிவேற்றம் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார். அதேவேளையில் நாடாளுமன்றத்தின் சட்டத்தை மீறிய் செயல்பட்டதற்காக 1000 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை செலுத்த தாம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.