அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கை ஏற்றுகொள்ளப்பட்டது !
முதன்மைச் செய்திகள்

தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கை ஏற்றுகொள்ளப்பட்டது !

கோலாலம்பூர், மார்ச்.28 –

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தேர்தல் தொகுதி எல்லைகளின் மறுசீரமைப்பு மீதான அறிக்கையை மக்களை இன்று ஏற்று கொண்டது.  இந்த அறிக்கைக்கு ஆதரவாக 129 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்த்து 80 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

முன்னதாக அந்த அறிக்கைத் தொடர்பில் தேசிய முன்னணியில் சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்கட்சி கூட்டணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. விவாதம் முடிந்த நிலையில் அறிக்கையை ஏற்று கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்தல் தொகுதி எல்லைகளின் மறுசீரமைப்பு மீதான அறிக்கை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்று கொள்ளப்பட்டது. இதனையடுத்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மிக விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன