புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அடுத்த இலக்கை நோக்கி மை ஹிவன் இண்டர்நேஷனல்! – ஷாகுல் அமிட்
சமூகம்முதன்மைச் செய்திகள்

அடுத்த இலக்கை நோக்கி மை ஹிவன் இண்டர்நேஷனல்! – ஷாகுல் அமிட்

கோலாலம்பூர், மார்ச் 27-

மலேசியாவின் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக விளங்கும் மை ஹிவன் இண்டர்நேஷனல் 3 நாடுகளுடன் புதிய கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நைஜீரியா, சவூதி அரபியா, இந்தியா என 3 முதன்மையான நாடுகளுடனான புரிந்துணர்வில் மை ஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தோற்றுநரும் உரிமையாளருமான டத்தோ ஷாகுல் அமிட் டாதுத் கையெழுத்திட்டார்.

சவூதி அரபிய நாடு அதிகமான மக்கள் தொகையை கொண்டது. இங்கு பலதரப்பட்ட தொழிலியல் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஷாகுல் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக தொழில் துறையில் மேம்பட வேண்டுமென்ற எண்ணத்தில் உள்ள வர்த்தகர்கள் அனைவரும் துபாயை நோக்கித்தான் தங்களின் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அதேபோல் சவூதி அரபியாவிலும் பலதரப்பட்ட வாய்ப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக மை ஹிவன் இண்டர்நேஷனல் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் எங்களின் மூலதனம். அதை அறிந்து செயல்படுவதால்தான் 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக நமது நிறுவனம் செயல்படுகின்றது என செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு நடந்த பாராட்டு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஷாகுல் தெரிவித்தார்.

காலையில் எழுவதற்கு முன்னதாகவே எப்போது பணத்தை செலுத்துவீர்கள் என்ற வங்கி அதிகாரிகளின் அழைப்புகளோடுதான் எழுவோம். ஆனால் கடின உழைப்பு, விடா முயற்சிதான் எங்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இத்தருணத்தில் இத்தனை ஆண்டுகால தம்முடைய பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் நினைத்துப் பார்ப்பதாக ஷாகுல் நெகிழ்ந்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் மை ஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆதரவாளர்களுக்கும் தமது நிறுவனத்தில் பல ஆண்டு காலமாக பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஷாகுல் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன