வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பெஸ்தினோ வழக்கு : ஜூன் 27இல் செவிமடுக்கப்படும்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெஸ்தினோ வழக்கு : ஜூன் 27இல் செவிமடுக்கப்படும்!

ஈப்போ,- மார்ச் 28-

பெஸ்தினோ முதலீட்டாளர்கள் அதன் நிர்வாக இயக்குநர்கள் மீது தொடுத்த வழக்கினை ஈப்போ நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து அதன் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளான ஐவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்தனர்.

இவ்வழக்கினை இவ்வாண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செவிமடுக்கவிருப்பதாக முதலீட்டாளர்களின் ஒருங்கிணைப்பாளரான குணசேகரன் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களின் சார்பின் திரு கோபாலன் நாயர் முதன்மை சாட்சியாளராக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதிவாதியான பெஸ்தினோ இயக்குநர்கள் இவ்வழக்கிற்கு தாங்கள் விளக்கமளிக்க ஒன்றுமில்லை என்று முன்வைத்த வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட வேளையில் முதலீட்டாளர்கள் வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன் தொடர்பாக முதலீட்டாளர்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் ஒன்றும் ஜுன் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளராகிய குணசேகரன் கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன