ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தளபதியின் புதிய சாதனை!! பிரிட்டனின் தேசிய விருதை வென்றது மெர்சல்!!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தளபதியின் புதிய சாதனை!! பிரிட்டனின் தேசிய விருதை வென்றது மெர்சல்!!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வந்த மெர்சல் திரைப்படம்  ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த ஆண்டு மலேசியாவில் வெளியீடு கண்ட படங்களிலும் மெர்சல்தான் அதிக வசூல் என இப்படத்தை மலேசியாவில் வெளியிட்ட டிஎஸ்ஆர் சினிபிலெக்ஸும் அறிவித்திருந்தது. அண்மையில் இந்த திரைப்படத்தை மறு திரையீடு செய்த போதும், மலேசிய விஜய் ரசிகர்களின் ஆதரவோடு மகத்தான வெற்றி பெற்றது.

யூடியுப்பில் அதிக லைக்குகளை சில நிமிடங்களில் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றது மெர்சல். அதோடு ஆழப்போறான் தமிழன் பாடலைதான் அதிகமானவர்கள் யூடியுப்பில் பார்வையிட்டுள்ளார்கள். இந்த வரிசையில் மற்றொரு பெருமையை மெர்சல் பெற்றுள்ளது.

பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் தளபதியின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் நாட்டில் பெரிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.

பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் தளபதி ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன