அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மே 17இல் திரையரங்கை நாடும் கார்த்திக் ஷாமளனின் சுகமாய் சுப்புலஷ்மி!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மே 17இல் திரையரங்கை நாடும் கார்த்திக் ஷாமளனின் சுகமாய் சுப்புலஷ்மி!

கோலாலம்பூர், ஏப். 2-

நம் நாட்டில் 2018-ஆம் ஆண்டின் மாபெரும் எதிர்பார்ப்பாக ‘சுகமாய் சுப்புலக்ஷ்மி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அனைத்துலகத் திரைப்பட விருது விழாவில் இரு விருதுகளைப் பெற்ற ‘என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் ஷாமளனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இத்திரைப்படம், ‘சோனி மியூசிக் மலேசியா நிறுவனத்தின் இணைவெளியீடாக வெளிவரும் முதல் மலேசியத் தமிழ்த்திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை எம்.எ. புரோடக்ஷன்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் வெளியிடுகிறது.

2 மணிநேரங்கள் 20 நிமிடங்கள் ஓடும் ‘சுகமாய் சுப்புலக்ஷ்மிக்காக, லிம்கோக்விங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இளம் குழுவொன்று இணைந்து உழைத்துள்ளது. 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட அந்தக் குழுவினர் மட்டுமல்லாது, படத்தில் வலம்வரும் நடிகர் நடிகையரும் புதுமுகங்கள்தான். ‘இனி வேண்டாம் பாடல் புகழ் சரேஷ், புனித்தா சண்முகம், பாக்யா அறிவுக்கரசு, குபேன் மகாதேவன், ‘கீதையின் ராதை கர்ணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

காதல், நகைச்சுவை என ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களுக்கு ஷமேஷன் மணிமாறன் மற்றும் நிரோஷன் தனசேகரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். மே 17-ஆம் திரைக்காணவுள்ள இந்தத் திரைப்படத்தை உங்கள் அருகே உள்ள திரையரங்குகளில் காண தவறாதீர்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன