திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பொய்ச் செய்தித் தடுப்பு மசோதா மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பொய்ச் செய்தித் தடுப்பு மசோதா மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது!

கோலாலம்பூர், ஏப். 3-
பொய்ச் செய்தித் தடுப்பு மசோதா இன்று மேலவையில் அங்கீகரிக்கப்பட்டது. இது குறித்து மேலவைத் தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறுகையில், அந்த சட்ட மசோதா குறித்து 17 செனட்டர்களின் விவாதங்களுக்கு பின்னர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சட்ட மசோதாவை பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இன்று மதியம் மேலவையில் தாக்கல் செய்தார்.

அனைவரையும் பாதுகாக்கவும் பொது அமைதியை நிலைநாட்டவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொய் செய்தித் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த மசோதா மேலவையில் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அடுத்து பேரரசரின் அங்கீகாரத்தைப் பெற சமர்ப்பிக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன