முகப்பு > விளையாட்டு > சாம்பியன்ஸ் லீக் -செவியாவை வென்றது பாயேர்ன் மூனிக்!
விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் -செவியாவை வென்றது பாயேர்ன் மூனிக்!

செவியா, ஏப்.4 –

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் செவியா 1 – 2 என்ற கோல்களில் ஜெர்மனியிடன் பாயேர்ன் மூனிக்கிடம் தோல்வி கண்டது. இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி அதிரடி படைத்த செவியா, காலிறுதி ஆட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

32 ஆவது நிமிடத்தில் பப்லோ சாராபியா போட்ட கோலின் மூலம், செவியா முன்னணிக்கு சென்றது.எனினும் பிரேன்க் ரிபேரி போட்ட கோலின் வழி பாயேர்ன் மூனிக் ஆட்டத்தை சமப்படுத்தியது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்த பாயேர்ன் மூனிக் 68 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டது.

தியாகோ அல்காந்தரா அந்த கோலைப் புகுத்தினார். செவியாவை வீழ்த்துவதில் தமது அணிக்கு அதிர்ஷ்டம் இருந்ததாக பாயேர்ன் மூனிக் பயிற்றுனர் யாப் ஹென்கேஸ் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன