திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > இவ்வாரமும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

இவ்வாரமும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!

பெட்டாலிங் ஜெயா, ஏப். 4-
ஒவ்வொரு வாரமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் விலையில் இந்த வாரம் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசாக நிலைநிறுத்தப்பட்டுள்ள வேளையில் ரோன் 97 பெட்ரோல் விலை கடந்த வாரத்தை போலவே 2.47 காசுக்கு விற்கப்படும்.

அதேபோல் டீசல் விலையிலும் மாற்றமில்லை. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை டீசல் விலை 2.18 காசாக விற்கப்படும்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. வருகின்ற 11ஆம் தேதி வரையில் இந்த விலைகள் இருக்குமென உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன