புத்ராஜெயா, ஏப் 6-
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளைதான் நாடாளுமன்றம் கலைக்கப்படவிருப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தாம் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியை பெற்ற விட்டதாகவும் கூறிய அவர், சரவாக்கைத் தவிர்த்து இதர மாநிலங்களிலுள்ள மாநில மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள் சட்டமன்றங்களை கலைப்பதற்கு மாநில சுல்தான்கள், ஆளுநர்களிடம் அனுமதி பெற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.