அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பி.கே.ஆர். சின்னத்தில் நம்பிக்கை கூட்டணி போட்டி! மகாதீர் அறிவிப்பு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பி.கே.ஆர். சின்னத்தில் நம்பிக்கை கூட்டணி போட்டி! மகாதீர் அறிவிப்பு

பாசிர் கூடாங், ஏப்.6-

வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் இன்று ஜொகூர், பாசீர் கூடாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இக்கருத்தரங்கில் சிறிய உரையை வழங்கிய அவர் தனது சீருடையில் பி.கே.ஆர். சின்னத்தை அணிந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை செய்தார்.

உறுப்புக் கட்சிகள் தங்களது சின்னத்தை விட்டுவிட்டு பி.கே.ஆர். சின்னத்தில் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது எளிதானது அல்ல. ஜ.செ.க. 60 ஆண்டுகளாக தனது ரோக்கேட் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. தற்போது நம்பிக்கை கூட்டணியிலுள்ள 4 கட்சிகளும் ஒற்றுமை அடிப்படையில் ஒரே சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளதாக மகாதீர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன