முகப்பு > குற்றவியல் > இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் கூடுதலாக 700 இடங்கள்! பிரதமர் அறிவிப்பு
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் கூடுதலாக 700 இடங்கள்! பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப். 7-

உயர்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக 700 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்தார். ம.இ.கா.வின் தலைவர் டத்தோஶ்ரீ சுப்ரமணியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு காப்பாரில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப், மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு 1500 இடங்கள் ஒதுக்கப்படுமென அறிவித்தார். தற்போது கூடுதலாக 700 இடங்களை வழங்கியுள்ளார். இந்நிலையில் இப்பருவத்தில் மெட்ரிகுலேஷனில் பயில 2200 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

23 ஆண்டுகாலமாக பிரதமராக இருந்த துன் மகாதீர் இந்தியர்களுக்கு எந்த திட்டத்தையும் குறிப்பாக சலுகையையும் வழங்கியதில்லை. ஆனால் இப்போது வெற்றி பெற்றால் பல திட்டங்களை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதை இந்தியர்கள் நம்பிவிடக்கூடாது என பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னதாக தாம் 2009ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் இதுநாள் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இந்திய சமுதாயத்திற்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். இன்று காலை பந்தாய் டாலாமில் பி40 பிரிவினருக்கான 50 கோடி அமானா சஹாம் சிறப்பு நிதியின் தொடக்க விழாவிற்கு தலைமையேற்ற டத்தோஶ்ரீ நஜீப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன