வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 14ஆவது பொதுத் தேர்தல்: மே9இல் பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை
முதன்மைச் செய்திகள்

14ஆவது பொதுத் தேர்தல்: மே9இல் பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை

கோலாலம்பூர், ஏப். 10-

எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தல் மே 9இல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மே 9ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலிட் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 6941 பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன. மாநில கல்வி இலாகா மற்றும் மாவட்ட கல்வி மையங்களை தவிர்த்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என இன்று 57ஆவது  கல்வி பிரிவு நிர்வாகம் தொடர்பான தலைமையாசிரியர்களுக்கான மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது இத்தகவலை வெளியிட்டார்.

மே 9ஆம் தேதி பொதுத் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் என்றும் மே 5ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்கு 11 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன