திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 67,000 டாக்சி ஓட்டுனர்களுக்கு ஒரே மலேசியா உதவி அட்டைகள்
முதன்மைச் செய்திகள்

67,000 டாக்சி ஓட்டுனர்களுக்கு ஒரே மலேசியா உதவி அட்டைகள்

செர்டாங், ஏப். 13-

நாடு முழுவதிலும் உள்ள 67,000 டாக்சி ஓட்டுனர்களளுக்கு 800 வெள்ளி மதிப்புடைய ஒரே மலேசியா டாக்சி உதவி அட்டைகளைப் பெற்றனர்.

டாக்சி ஓட்டுநர்கள் இந்த அட்டையை பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை (என்ஜிவி) நிரப்புவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பெட்ரோனாஸ் நல்லுறவு விசுவாச திட்டத்தின் கீழ் இந்த அட்டை வெ. 50,000 வரையில் தனிநபர் பாதுகாப்பு காப்புறுதி சலுகையையும் வழங்குகிறது என இன்று மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் இந்த உதவி அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் போது தமதுரையில் குறிப்பிட்டார்.

நிதியமைச்சின் ஒத்துழைப்புடன் ஸ்பாட் எனப்படும் தரை போக்குவரத்து ஆணையத்தினால் வழங்கப்படும் இந்த அட்டைகள் 53.6 லட்சம் வெள்ளி நிதியை உட்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த அட்டையின் மூலம் டாக்சி ஓட்டுநர்களின் அன்றாட நடவடிக்கைக்கான செலவினம் குறைவதோடு  அவர்களின் வருமானமும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷூக்ரி, ஸ்பாட் இடைக்கால தலைவர் டான்ஸ்ரீ முகமது ஈசா அப்துல் சாமாட், ஸ்பாட் தலைமை நிர்வாக இயக்குநர் முகமது அஸாஹாருடின் மாட் சா ஆகியோர் உட்பட சுமார் 10,000க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன