இன்று உங்களது ராசி பலன்

0
12

மேஷம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட்டாலும் புத்திசாலிதானத்தால் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

 

ரிஷபம்

இன்று உங்கள் மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும்.

 

மிதுனம்

இன்று உங்களது காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கடகம்

இன்று உங்களது சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். உறவினர்களுடன் பேசும்போது வீண் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.

 

சிம்மம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

 

துலாம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

 

விருச்சிகம்

இன்று காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

 

தனுசு

இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

 

மகரம்

இன்று உங்கள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

 

கும்பம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு தேவையற்ற வீண்செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

 

மீனம்

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக. ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பம் தொடர்பான எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். சிறு பிரச்னைகள் வரக்கூடும். ஆனால், உங்களது புத்திசாலிதனத்தால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.